Skip to main content

About School

 பள்ளியின் தோற்றம்

என் பள்ளி ஆனது 1908 ஆம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த செய்யார் நகரத்தில் இறைப் பணியாற்ற வந்த அருட்பணி மிக்நேரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பல இறையடியாளர்களின் கடும் முயற்சியால் வளர்ந்து 1947 ஆம் ஆண்டு 1 முதல் 5 வகுப்புகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

1968 இல் நடுநிலை ப்பள்ளியாக உயர்த்தப்பட்டு எட்டாம் வகுப்பு வரை அங்கீகாரம் பெறப்பட்டு 16/6/1995 முதல் புனித பவுல் (செயின்ட் பால்ஸ்) உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டதால் 01/07/1995 முதல் ஆர் சி எம் துவக்க பள்ளியாக தனியாக ஒரே நிர்வாகியின் கீழ் செயல்பட்டு வருகிறது.

பள்ளியின் நிர்வாகம்

வேலூர் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ் டயோசிஸ் ஆப் வேலூர் சொசைட்டி என்று அரசு பதிவு பெற்ற சங்கத்தின் கீழ் கிறிஸ்துவ மத சிறுபான்மையினரால் எம் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.       

எம் பள்ளியின் நோக்கம் 

வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களும் வாழ்க்கையை தொலைத்து நின்றவர்களும் இலக்குகளை தெளிவாக அடைய முடியாமல் தவிக்கும் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை மேலே கொண்டு வரவும் அறிவு கண்ணை திறப்பதும் வேறுபாடு கருதாமல் சமமாக அன்பு செய்வதும் தான் எம் பள்ளியின் நோக்கமாக உள்ளது. மேலும் பூமி தனக்கே சொந்தம் என்று புலம்பி தெரியும் மாணவரை பூமிக்கு நீ சொந்தம் என்று புரிய வைக்க பாடுபடுவதும் தான் எம் பள்ளியின் தலையாய கடமையாகும்.     

வேலூர் வரை மாவட்டம் கத்தோலிக்க ஆயர்கள் .மேதகு ஆயர்கள்  மேதகு ஆயர் தாவீது மேதகு ஆயர் மைக்கல் அகஸ்டின் மேதகு ஆயர் சின்னப்பா மேதக ஆயர் சவுந்தர்ராஜ் மற்றும் இப்போதுள்ள ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சை முத்து இவர்களின் வழியில் தலைவர்களாகவும் வேலூர் மறைமாவட்டத்தின் ஆர் சி எம் பள்ளிகளின் மேலாளர்களாக இருந்த அருட்தந்தையர்கள் அருட்தந்தை பிரான்சிஸ் அருட்தந்தை ஏ சி சவுரிமுத்து அருட்தந்தை கிளமெண்ட் ரோசாரியோ இப்போ உள்ள அருட்தந்தை லூர்து சேவியர் இவர்களின் மேலான வழிகாட்டுதலாலும் எம் ஆர் சி எம் பள்ளியின் தாளாளர் தந்தையர்களின் உடன் இருப்பாலும் வழிகாட்டுதலாலும் கண்காணிப்பினாலும் மேலும் மறை மாவட்டத்தின் கல்வி குழு உறுப்பினர்களாலும் மிகவும் சிறப்பான முறையில் எம் பள்ளி ஆனது வளர்ந்தோங்கி இருக்கின்றது என்பதை கூறிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இந்தக் கல்வி பாசறையில் ஜாதி மதம் இனம் என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் அவரவர் இயல்போடு அறிவு திறனோடு திறமையோடு வளர்ந்து கல்வி கற்று சிறந்த மாணவர்களாக பெருமை சேர்த்து சமுதாயத்தில் ஒரு சிறந்த மாணவர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி - மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

 

புகையில்லா பொங்கல் திருநாள் கொண்டாட்டம் உறுதிமொழி

 St Paul High School, RCM Primary school, St Joseph 3 பள்ளிகள் இணைந்து இன்று சமத்துவ பொங்கல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட தருணம்..

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் முதியோர் கல்வி தேர்வு நாள் 14/12/25 ஞாயிறு அன்று முடிவடைந்தது